ஓடும் காரிலிருந்து கீழிறங்கி நடனமாடும் "கிகி சேலஞ்ஜ்'-இல் ஈடுபட்டதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் இரு சிறுவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் யுகல் மன்ஹாஸ் கூறியதாவது:
கிகி சேலஞ்ஜில் ஈடுபட்ட வீனேஷ் சிப்பர், சேத்தன் பாலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் கிகி சேலஞ்ஜில் ஈடுபட்ட தங்களது விடியோவை முகநூலில் பதிவிட்டதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான வகையில் இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட வேண்டாம் என அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று யுகல் மன்ஹாஸ் கூறினார்.
கனடா நாட்டு பாடகர் ஒருவரின் பாட்டுக்கு ஏற்றவாறு, ஓடும் காரிலிருந்து கீழிறங்கி நடனமாடிவிட்டு மீண்டும் அதே காரில் ஏறும் இந்த ஆபத்தான சாகசமே "கிகி சேலஞ்ஜ்' என்று அழைக்கப்படுகிறது. சமூக வலைதலங்களில் இதுதொடர்பான விடியோ பலராலும் பரவலாக பகிரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள் விழா கோலாகலம்: தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

மல்லகுண்டா, 102 ரெட்டியூா் ஊராட்சிகளில் குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியல்

தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் தேசியக்கொடி மிதிவண்டி பேரணி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


