சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியானதால், ஜனக்புரி காவல் நிலைய ஆய்வாளர் இந்திரபால் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பெண் சாமியார் நமிதா ஆச்சார்யா, சீருடையில் இருக்கும் இந்திரபால் சிங்கின் தலையில் கை வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியான நிலையில், பெண் சாமியார் தனது தலையில் கையை வைத்து ஆசிர்வாதமே செய்ததாக இந்திரபால் சிங் தெரிவித்தார். எனினும், அவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அவரை மாவட்டப் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்து, காவல்துறை துணை ஆணையர் (மேற்கு) விஜய் குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் துணை ஆணையர் தலைமையிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, விவேக் விஹார் காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சய் சர்மா, பெண் சாமியார் ராதே மாவுடன் இருக்கும் சர்ச்சைக்குரிய புகைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









