அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மின் கட்டணக் குறைப்பு என்பது ஏமாற்று வேலை

தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.

Updated On :29 மார்ச் 2018, 7:24 pm

தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
 இது குறித்து பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வியாழக்கிழமை கூறியதாவது:  புதிய மின்கட்டண முறையில் மின் கட்டண மீட்டர்களுக்கான நிலையான  கட்டண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மானிய முறையில் மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். புதிய கட்டணத்தின்படி, 150 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது. 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் குறையவுள்ளது.  ஏழை, நடுத்தர மக்கள் 150 யூனிட் வரையே மின்சாரத்தை பயன்படுத்துவர். அவர்கள் 400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பில்லை.  எனவே, இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது ஒரு ஏமாற்று வேலையாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கேஜரிவால்,  மக்களை ஏமாற்றி விட்டார்.  தில்லி அரசு வழங்கும் மானியத் தொகையால் மின் உற்பத்தி நிறுவனங்களே லாபமடைகின்றன. மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.6,000 கோடி மானியத் தொகையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.