கர்நாடகத்தில் பாஜக ஆட்சி: விஜய் கோயல் நம்பிக்கை
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.


சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற விரும்புபவர்கள் தங்களது கையெழுத்துக்களை எழுதும் வகையிலான கையெழுத்துச் சுவரை ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற விரும்புபவர்கள் தங்கள் கையெழுத்துகளை இந்தச் சுவரில் எழுதலாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் மன நிறைவுடன் உள்ளதை பாஜக அடுத்தடுத்துப் பெறும் தேர்தல் வெற்றிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடக மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் துன்பப்படுகிறார்கள். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மக்களின் கோபம் இந்த தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். பாஜகவின் தொடர் வெற்றிகளால் எதிர்க்கட்சிகள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள் என்பதற்கு மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளே உதாரணமாகும். கர்நாடகத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...