மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

500 சாதாரண பேருந்துகள் வாங்க தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

தில்லி அரசு 500 சாதாரண பேருந்துகளைக் கொள்முதல் செய்ய தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

Updated On :22 அக்டோபர் 2018, 8:11 pm

தில்லி அரசு 500 சாதாரண பேருந்துகளைக் கொள்முதல் செய்ய தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
கடந்த 2ஆம் தேதி தில்லி அரசு 500 சாதாரண பேருந்துகள் வாங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், புதிதாக வாங்கப்படும் சாதாரண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு ஏற்றவாறு ஹைட்ராலிக் தூக்கிகள் இருக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம்  நிபந்தனையுடன் அனுமதி அளித்தது.
தாழ்தள பேருந்துகளுக்கு பதிலாக சாதாரண பேருந்துகள் வாங்கும் தில்லி அரசின் முடிவுக்கு எதிராக மாற்றுத்திறனாளி நிபுன் மல்ஹோத்ரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், தில்லி அரசு 1000 சாதாரண பேருந்துகள் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு தடை ஏற்பட்டது.
இந்நிலையில், தில்லி பொது போக்குவரத்தை ஊக்குவிக்க புதிய பேருந்துகள் வாங்குவது அவசியம் என்றும் புதிய சாதாரண பேருந்துகளில் ஹைட்ராலிக் தூக்கிகள் பொருத்தப்படும் என்று தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதையடுத்து, கடந்த 2ஆம் தேதி 500 சாதாரண பேருந்துகள் வாங்க தில்லி அரசுக்கும், தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதே வாக்குறுதியை தில்லி அரசு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலும் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், "ஹைட்ராலிக் தூக்கிகள் பொருத்தப்பட்ட 500 சாதாரண பேருந்துகள் வாங்க தில்லி அரசுக்கும், தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நிபுன் மல்ஹோத்ரா தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக மல்ஹோத்ராவின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.