பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வால்மார்ட், பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிராக 28-இல் கடையடைப்பு: சிஏஐடி

வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய முழு கடையடைப்பு நடத்த அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) முடிவு செய்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய முழு கடையடைப்பு நடத்த அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) முடிவு செய்துள்ளது.
வால்மார்ட்- பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் சில்லறை வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சிஏஐடி சார்பில் தில்லியில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் சிஏஐடி தேசியத் தலைவர் பி.சி.பார்ட்டியா, பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 அப்போது செய்தியாளர்களிடம் பிரவீண் கண்டேல்வால் கூறியதாவது: வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்தால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சில்லறை வணிகர்கள், லட்சக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமேசான் - அலிபாபா ஆகிய இணைய வர்த்தக நிறுவனங்கள் இதே போன்றதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், மேலும் கோடிக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவர்.
 இந்நிலையில், வால்மார்ட் - பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் சில்லறை வணிகர்கள் சுமார் 7 கோடி பேர், லட்சக்கணக்கான மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்தால் சில்லறை வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கூறும் வகையிலான 'டிஜிட்டல் ரத யாத்திரை'யை 90 நாள்கள் நடத்தவுள்ளோம். நாடு முழுவதும் செல்லவுள்ள இந்த யாத்திரை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தில்லியில் இருந்து தொடங்கி டிசம்பர் 16- ஆம் தேதி தில்லியில் முடிவடைகிறது. அன்றைய தினம் தில்லியில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. மேலும், வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்தின் பாதக அம்சங்கள் தொடர்பாக வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.