ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தில்லியில் 24, 25-இல் தேசிய பேச்சுப் போட்டி

தில்லியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தேசிய பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 6:11 am IST

தில்லியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தேசிய பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. 
மத்திய அரசின் இளைஞர் நலன் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திர சங்கதன் அமைப்பு (என்ஓய்கேஎஸ்) சார்பில் இப்போட்டி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், நூலகத்தில் நடைபெற உள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தில் அதிக இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலும், தேசிய கட்டமைப்பில் முழு மனதுடன் பங்கேற்பதற்காக இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை பலப்படுத்தவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும், தலைமைப் பண்புகளுடன்கூடிய இளையோரை அடையாளம் காணவும், அதிகாரமளித்தல் மற்றும் முழு வளர்ச்சியில் அவர்களுக்கான சிறந்த தொடர்புத் திறனை கண்டறியவும் இந்நிகழ்ச்சியை தேசிய யுவ கேந்திரா சங்கதன் நடத்துகிறது. கடந்த 2015-16-இல் இருந்து இந்தப் போட்டியை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பங்கேற்று வருவதாகத நேரு யுவ கேந்திரா அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.