வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

மழை குறைந்ததால் மீண்டும் மாசு அளவு அதிகரிப்பு!

தலைநகரில் மழை குறைந்ததன் காரணமாக மாசு அளவு புதன்கிழமை அதிகரித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 11:20 pm IST

தலைநகரில் மழை குறைந்ததன் காரணமாக மாசு அளவு புதன்கிழமை அதிகரித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.
தில்லியில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், தில்லியில் நீடித்து வந்த காற்று மாசுவின் தாக்கம் மிதமான நிலைக்குக் கீழிறங்கியது. 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து மழை பெய்யவில்லை. புதன்கிழமையும் வானம் தெளிவாகக் காணோப்பட்டது. மழை குறைந்ததால் மாசு அளவு மிதமான பிரிவில் இருந்து மோசம் பிரிவுக்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலில், புதன்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 218 ஆக இருந்தது. 27 இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவிலும், மூன்று இடங்களில் மிதமான பிரிவிலும் நிலவியது. 
தேசியத் தலைநகர் வலயத்தில் நொய்டா, ஃபரீதாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவிலும் நீடித்தது. தில்லியில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு அளவு 101 ஆகவும், பி.எம். 10 நுண்துகள் மாசு அளவு 154 ஆகவும் பதிவாகியிருந்தது.
மழை குறைந்ததால் மாசு அளவும் அதிகரித்ததாகவும், அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் தரம் மோசம் மற்றும் மிதமான பிரிவுகளுக்கு இடையே மாறி, மாறி இருக்கும் எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு (சஃபர்) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஒட்டுமொத்த காற்றின் தரம் அடுத்த இரு தினங்களுக்கு மிகவும் மோசம் நிலையிலேயே நீடிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதவீதமாக பதிவாகியிருந்தது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தலைநகரில் 27.8 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை காலையில் மிதமான மழை மற்றும் இடியுடன் அடர் பனிமூட்டம் நிலவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.