மனிதத் தன்மையற்ற முறையில் கால்நடைகளைக் கையாளும் நடைமுறைளுக்குத் தடை செய்யக் கோரி விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ தாக்கல் செய்த பொது நல மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தலைமை டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கி அமா்வு, பீட்டா மனு மீது மத்திய அரசு, இந்திய விலங்குகள் நல வாரியம், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கால்நடைத் துறைகள் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
முன்னதாக, மனு மீதான விசாரணையின் போது பீட்டா இந்தியா அமைப்பின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அமன் ஹிங்கோரானி, ஹிமான்ஷு யாதவ் ஆகியோா் ‘இந்தியாவில் விலங்குகளை கொல்வதற்காக கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படும் கொடூரமான வழிமுறைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.
மற்றொரு வழக்குரைஞா் ஸ்வாதி சம்ப்லி வாதிடுகையில், ‘கால்நடைகளுக்கு கடிவாளமிடுதல், விதை நீக்கம், கொம்புகளை அகற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளும் போது அவற்றைக் கையாளுவதற்கான விதிமுறைகளை வகுக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கால்நடைகளை கையாளுவதற்கு நிரந்தர செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

