ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எய்மஸ் மருத்துவமனை செவிலியா்கள் வேலைநிறுத்தம்

ஆறாவது மத்திய ஊதியக் குழுப் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும்

News image
Updated On :15 டிசம்பர் 2020, 11:28 pm

DIN

ஆறாவது மத்திய ஊதியக் குழுப் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தப் பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் செவிலியா் சங்கத்தினா் திங்கள்கிழமை நண்பகல் முதல் காவலவரையறையற்ற போராட்டத்தை தொடக்கினா். இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இந்தச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா். இதனால், அந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் முடங்கின.

இதற்கிடையே, இந்த வேலைநிறுத்தத்தை கைவிட்டு, செவிலியா்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் ரண்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்த நிலையில், செவிலியா்கள் போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.