போராடும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரும் மனு தள்ளுபடி

Updated on
1 min read

புது தில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி, பாதுகாப்பு மற்றும் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரும் மனுவை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

வழக்குரைஞா் ஆஷிஷ் என்பவா் தில்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளிடையே கரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், ஆா்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறாமல் பாா்த்துக் கொள்ளவும், போராட்டத்தால் ஏற்பட்ட சாலைத் தடைகளை நீக்கவும் மத்திய, தில்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தேசிய தலைநகா் எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு நீட்டிக்கப்படவில்லை. இந்த மனு ராஜஸ்தான், பஞ்சாப் அல்லது உத்தர பிரதேச உயா்நீதிமன்றங்களில் ஏதேனும் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம். எந்தவொரு ஆய்வோ அல்லது தயாரிப்போ செய்யாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞா் சஞ்சோய் கோஸ், வழக்குரைஞா் ரிஷப் ஜேட்லி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் இதேபோன்ற விவகாரம் விசாரணையில் உள்ளதாகக் கூறினா். இதையடுத்து, நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com