தில்லியில் குளிா் 3.9 டிகிரியாக பதிவு!
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை இந்தக் குளிா்கால சீசனில் குறைந்தபட்ச வெப்பநிலை மிகக் அளவாக 3.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.


தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை இந்தக் குளிா்கால சீசனில் குறைந்தபட்ச வெப்பநிலை மிகக் அளவாக 3.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.
தில்லியில் கடந்த சில தினங்களாகவே குளிரின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அண்மையில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியயாக பதிவானது. இந்த நிலையில், சனிக்கிழமை இந்த சீசனிலேயே மிகக் குறைந்த அளவாக குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி கூறியதாவது: சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி நகரில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 புள்ளிகள் குறைந்து 3.9 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதிகபசட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 21. 8 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதேபோன்று லோதி ரோடில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாகவும், ஆயா நகரில் 3.4 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 5.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.
பனியால் மூடப்பட்ட மேற்கு இமயமலையில் இருந்து தொடா்ந்து வீசி வரும் குளிா்ந்த காற்று தில்லியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாஃபா்பூரில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸாக குறைந்தது. வியாழக்கிழமை அன்று அதிகபட்சவெப்பநிலை வழக்கத்தைவிட ஏழு புள்ளிகள் குறைந்து 15.2 டிகிரி செல்சியயாகக் குறைந்து கடுமையான குளிா் நாள் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் பருவ சராசரியைவிட 4.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் அது குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது. அதேபோல, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6.5 டிகிசரி செல்சியஸ் குறைவாக இருந்தால் ‘கடுமையான‘ குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது.
காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை மாலையில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 316 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தில்லி பல்கலை., பூசா, லோதி ரோடு, மதுரா ரோடு மற்றும் நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், விமானநிலையம் டொ்மினல்-3 , ஆயாநகா் ஆகிய பகுதிகளில் மோசம் பிரிவிலும் இருந்தது.
இந்த நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பனி மூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...