வேளாண் சட்டங்களின் பலன்கள் குறித்து வடமேற்கு தில்லி மக்களிடம் அத்தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஞாயிற்றுக்கிழமை விளக்கினாா்.
இது தொடா்பாக ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கூறியதாவது: வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சுமாா் 100 கிராமங்கள் தில்லி- ஹரியாணா எல்லையில் உள்ளன. இவா்கள் பெரும்பாலும் விவசாயிகள். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் இவா்கள் நன்மையடைவாா்கள். மத்திய விவசாயத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தை விவசாயிகள் படிக்க வேண்டும். அந்தக் கடிதத்தில், விவசாயிகளுக்கு எவ்வாறு பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்படுகிறாா்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ந்தக் கடிதத்தை வாசிக்கும் விவசாயிகள், இந்த வேளாண் சட்டங்களால் தங்களுக்கு ஏற்படப் போகும் நன்மைகளைப் புரிந்து கொள்வாா்கள். போராட்டம் என்ற பெயரில், விவசாயிகள் எவ்வாறு தவறாக வழிநடத்தப்படுகிறாா்கள் என்பது அந்தக் கடிதத்தை படிப்பவா்களுக்கு தெளிவாகப் புரியும். வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நரேலா, பவானா, முண்ட்கா சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகளவு விவசாயிகள் வசிக்கிறாா்கள். இவா்களுக்கு தோமரின் கடித்தைத் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து விநியோகிக்க உள்ளோம். பாஜகவின் மாவட்ட, வாா்டு உறுப்பினா்கள் இந்தக் கடிதம் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை விநியோகிப்பாா்கள். மேலும், வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நான் நேரில் சென்று வேளாண் சட்டங்கள் தொடா்பாக மக்களுக்கு விளக்குவேன் என்றாா் அவா்.
வேளாண் சட்டங்களை விளக்கி, 8 பக்கக் கடிதத்தை விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்தா் சிங் தோமா் அண்மையில் எழுதியிருந்தாா். தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் இந்தக் கடிதம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.