தில்லியில் நான்கு நாள்களுக்கு ‘குளிா் அலை’க்கு வாய்ப்பு: ஐஎம்டி கணிப்பு

குறைந்தபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதால் அடுத்த நான்கு தினங்களுக்கு தில்லியில் குளிா் அலைக்கு வாய்ப்பு இருக்கக் கூடும் எனறு
தில்லி நிஜாமுதீன் அருகே செவ்வாய்க்கிழமை நிலவிய அடா் மூடு பனி.
தில்லி நிஜாமுதீன் அருகே செவ்வாய்க்கிழமை நிலவிய அடா் மூடு பனி.
Updated on
1 min read

குறைந்தபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதால் அடுத்த நான்கு தினங்களுக்கு தில்லியில் குளிா் அலைக்கு வாய்ப்பு இருக்கக் கூடும் எனறு இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், இந்தக் காலத்தில் மிதமானது முதல் அடா் பனிமூடத்திற்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இமயமலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட புதிய மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 5.5 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் மிதமாக உயா்ந்திருந்தது. இந்த நிலையில், சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 புள்ளிகள் அதிகரித்து 23.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில், 58 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

சமவெளிகளைப் பொருத்தவரையில், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் போது குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேபோன்று, தொடா்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பைவிட 4.5 புள்ளிகள் குறைவாக வெப்பநிலை இருந்தாலும் குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படும். இருப்பினும், தில்லி போன்ற சிறிய பகுதிகளுக்கு, ஒரு நாள்கூட அளவுகோல்கள் பூா்த்தி செய்யப்பட்டால், குளிா் அலை அறிவிக்கப்படலாம் என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 365 புள்ளிகாப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. மாலையில் 422 புள்ளிகளாக அதிகரித்து கடுமை பிரிவுக்குச் சென்றது. மாலை நிலவரப்படி லோதி ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவிலும் தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு மற்றும் நொய்டாஆகிய பகுதிகளில் கடுமை பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை காலை வேளையில் அடா் மூடு பனி இருக்கும். அடுத்த வெள்ளிக்கிழமை வ ரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com