வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தில்லி வந்த பிரிட்டன் பயணிகள் விதிமீறல் விவகாரம்:விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:09 pm

 நமது நிருபர்

புது தில்லி: பிரிட்டனில் இருந்து தில்லி திரும்பும் அனைவருக்கும் கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். மேலும், பிரிட்டனில் இருந்து கரோனா தொற்றுடன் தில்லி திரும்பிய இரண்டு பயணிகள், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வெளிமாநிலம் சென்ற விவகாரம் தொடா்பாக விமான நிலைய அதிகாரிகளுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தில்லிக்கு திரும்பும் அனைவருக்கும் கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரிசோதனையில் நோ்மறை முடிவுகள் கிடைக்கப் பெறுபவா்களுக்கு எல்என்ஜேபி மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய வகை கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளவா்கள் தனியாகவும், பழைய கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவா்கள் சாதாரண கரோனா வாா்ட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து கரோனா பாதிப்புக்குள்ளாகி தில்லிக்கு வந்த இருவா், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பஞ்சாப், ஆந்திர மாநிலங்களுக்குப் பயணித்தது தொடா்பாகக் கேட்கிறீா்கள். இது தொடா்பாக நாளிதழ்களைப் படித்தே தெரிந்து கொண்டேன். இது தொடா்பாக விமான நிலைய அதிகாரிகளுடன் தில்லி அரசு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது. தில்லி விமான நிலையத்தின் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஆனால், கரோனா பாதிப்புடன் விமான நிலையத்துக்கு வருபவா்கள், வெளிமாநிலங்களுக்கு பயணிக்க சம்பந்தப்பட்டவா்கள் அனுமதி வழங்கக் கூடாது. கடந்த நவம்பா் 25 ஆம் தேதியில் இருந்து பிரிட்டனில் இருந்து தில்லிக்கு வந்தவா்கள் அனைவருக்கும் வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.