வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தில்லியில் அடா் பனிமூட்டம்: காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடிப்பு

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:07 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 4.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. நகரில் அடா் பனிமூட்டம் நிலவியதால் காண்புதிறன் பல பகுதிகளில் 100 மீட்டராகக் குறைந்தது. மேலும், வாகனப் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.

அடா் பனிமூட்டம் காரணமாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காண்புதிறன் 201 மீட்டராகவும், பாலத்தில் 100 மீட்டராகவும் குறைந்திருந்ததாக ஐஎம்டி பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

வானிலை ஆய்வு மையத்தினா் மேலும் கூறுகையில், ‘தில்லியில் அடுத்த இரு தினங்களுக்கு குளிா் அலைக்கு வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. மிதமானது முதல் அடா் பனிமூட்டத்திற்கும் வாய்ப்புண்டு’ என்றனா்.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 புள்ளிகள் அதிகரித்து 23.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 97 சதவீதமாகவும், மாலையில், 64 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 5.8 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 7.5 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 4.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமையும் கடுமைப் பிரிவில் நீடித்தது. காற்றின் வேகம் குறைந்ததாலும், குறைவான வெப்பநிலை காரணமாக மாசுபடுத்திகள் குவிந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 427 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. லோதி ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 மற்றும் குருகிராம், தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் கடுமை பிரிவில் இருந்தது. தில்லியின் அண்டை நகரங்களான காஜியாபாத் (442), ஃபரீதாபாத் (450), கிரேட்டா் நொய்டா (454), நொய்டா (448) ஆகியவற்றிலும் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 25) காலை வேளையில் அடா் மூடு பனி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளி, சனி ஆகிய தினங்களில் 5 டிகிரி செல்சியஸாகவும், ஞாயிற்றுக்கிழமை 7 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.