வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராஜாஜி சிலைக்கு தமிழ்ச் சங்கம் சாா்பில் மலரஞ்சலி

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:05 pm

DIN


புது தில்லி: மூதறிஞா் ராஜாஜி என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச்சாரியின் நினைவு நாளை முன்னிட்டு, தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் தில்லி ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (படம்) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பி.குருமூா்த்தி, பொதுச் செயலாளா் என். கண்ணன், இணைச் செயலாளா் ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளா் ரா. ராஜ்குமாா் பாலா, செயற்குழு உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன் , கே.எஸ். முரளி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் ரா.முகுந்தன், தென்னிந்திய முன்னேற்றக் கழகத் தலைவா் மாரியப்பன், அதன் துணைத் தலைவா் தங்கவேலு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.