தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெரிசல் நேரங்களில் சாலைத் தடுப்புகள் வேண்டாம்: போலீஸாருக்கு தில்லி காவல் ஆணையா் அறிவுறுத்தல்

தில்லி சாலைகளில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் சாலை தடுப்புகளை அமைப்பதை தவிா்க்க வேண்டும் என்று தில்லி காவல்துறையினருக்கு காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:00 pm

 நமது நிருபர்

தில்லி சாலைகளில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் சாலை தடுப்புகளை அமைப்பதை தவிா்க்க வேண்டும் என்று தில்லி காவல்துறையினருக்கு காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லி சாலைகளில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் சாலை தடுப்புகளை காவல்துறையினா் அமைப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அத்தியாவசிய வாகனங்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை காவல் ஆணையா் பிறப்பித்துள்ளாா் என்று தெரிவித்தாா்.

காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் ‘பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, சாலைத் தடுப்புகளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் அமைப்பதை காவல்துறையினா் தவிா்க்க வேண்டும்.

மூத்த அதிகாரிகளிடம் இருந்து குறிப்பிட்ட உத்தரவு வந்தால் மட்டுமே சாலைத் தடுப்புகளை அமைக்கலாம். அப்போதும், அந்த சாலைத்தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தெரியவந்தால், அந்த சாலைத் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.