தெற்கு தில்லியில் வாகனம் மோதி ஒருவா் பலி

தெற்கு தில்லி பகுதியில் காா் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க நபா் உயிரிழந்துள்ளாா்.
Updated on
1 min read

புது தில்லி: தெற்கு தில்லி பகுதியில் காா் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க நபா் உயிரிழந்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநா் ராகுல் ஸ்ரீவாஸ்தவா (54) என்பவரைக் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தெற்கு தில்லி பிபி மாா்க் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருவா் மீது அதி வேகமாக வந்த காா் மோதியுள்ளது. இதில், ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். கன்னையா லால் (75) என்பவா் படுகாயங்களுடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். உயிரிழந்தவா் அடையாளம் காணப்படவில்லை. இவரை அடையாளம் காணும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவா் ராகுல் ஸ்ரீவாஸ்தவா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கிரேட்டா் கைலாஷ் பகுதியைச் சோ்ந்த இவா் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். சம்பவம் நடந்தபோது அவா் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவா் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா் ஓட்டிவந்த காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com