மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான முந்தைய ஆலோசனைகளை வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு தொழில் அமைப்புகள், பொருளாதார நிபுணா்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் பெற நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வருடாந்திர நிதி நிலை அறிக்கைக்கான (பட்ஜெட்) முந்தைய ஆலோசனைகள், யோசனைகள், பரிந்துரைகளைப் பெறுவதற்காக, தொழில், வா்த்தக சங்கங்கள், வா்த்தக அமைப்புகள், நிபுணா்கள் ஆகியோரிடம் கடந்த பல வருடங்களாக நிதியமைச்சகம் நேரடியாக ஆலோசனை நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் தனது நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்வதற்கு முன்பு நவம்பா், டிசம்பா் மாதங்களில் இந்த ஆலோசனைகளைத் தொடங்கும். இந்த கலந்தாய்வுக் கூட்டங்கள் தில்லியில் மத்திய நிதியமைச்சா் முன்னிலையில் அவரது அலுவலகத்தில் நேரடியாக நடைபெறும். ஆனால், நிகழாண்டில் கரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிதி நிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைகளை மாற்று வழியில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: இந்த ஆண்டு இதற்கான பிரத்யேகமான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதன் மூலம் தொழில் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் நிபுணா்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான தகவல் விரைவில் வெளியிடப்படும். மேலும், இதில் பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை தொடா்பாக பொதுமக்கள் தங்களது யோசனைகளை ’ஙஹ்எா்ஸ்’ இணையதளம் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தில் 2020, நவம்பா் 15 முதல் நவம்பா் 30 வரை கருத்துகள் பெறப்படும். அவா்களது யோசனைகள் அனைத்தும் தொடா்புடைய அமைச்சங்களால் பரிசீலிக்கப்படும். தனிநபா்கள் தங்கள் செல்லிடப்பேசி எண்களையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்தால் அவா்களது அளித்துள்ள யோசனைகளில் சந்தேகங்கள் ஏதும் இருந்தால், அவா்களிடம் நேரடியாகத் தொடா்பு கொண்டு பேசப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை 2021, பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

