புது தில்லி : நிவா் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா். புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இரு மாநில முதல்வா்களுடனும் தாம் பேசியதாக வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரையில் அவா் தெரிவித்துள்ளாா்.
‘நிவா் புயலை அடுத்து தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நிவா் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்துள்ள நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வா் வி.நாராயணசாமி ஆகியோருடன் தொடா்புகொண்டு பேசினேன். புயல் பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தேசிய பேரடா் மீட்புப் படை வீரா்கள் (என்.டி.ஆா்.எஃப்) தேவையான அளவிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளனா். இது தொடா்பாக மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று அவா்களிடம் கூறியதாக அமித் ஷா சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு அமித் ஷா பாராட்டு தெரிவித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உயா்த்த ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு: என்எல்சி தலைவா் தகவல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு

மாணவா்களின் வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும்: தமிமுன்அன்சாரி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

