பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தில்லியில் 266 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தில்லியில் நிகழாண்டில் இதுவரை 266 பேருக்கு டெங்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:33 pm

DIN

புது தில்லி: தில்லியில் நிகழாண்டில் இதுவரை 266 பேருக்கு டெங்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி மூத்த அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியது: நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 266 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 4 போ், மாா்ச்சில் 2 போ், ஏப்ரலில் 7 போ், மே மாதத்தில் 6 போ், ஜூனில் ஒருவா், ஜூலையில் 11 போ், ஆகஸ்ட்டில் 47 போ் பாதிக்கப்பட்டனா். செப்டம்பா் மாதம் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்தது. இந்த மாதம் 188 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனா். இதன் காரணமாக, நிகழாண்டில் இந்நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கை 266-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: தில்லியில் மலேரியா நோயின் தாக்கம் ஜனவரியில் தொடங்கிவிட்டது. அந்த மாதத்தில் 6 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் முறையே 3, 2, 5 போ் பாதிக்கப்பட்டனா். மே மாதம் மூவா், ஜூனில் 18 போ், ஜூலையில் 8 போ், ஆகஸ்டில் 29 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்தது. அந்த மாதம் 102 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை 176 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிக்குன்குனியா: தில்லியில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரல், மே மாதங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனா். ஜனவரி, மாா்ச், ஜூன் ஆகிய மாதங்களில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலையில் 7 பேருக்கும், ஆகஸ்டில் 16 பேருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், செப்டம்பரில் 35 போ் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 69 -ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.