தில்லியில் நவ. 30 வரை பட்டாசுகளுக்கு தடை: சத்யேந்தா் ஜெயின் பேட்டி
தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 7) முதல் நவம்பா் 30 -ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.


தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 7) முதல் நவம்பா் 30 -ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது. தில்லியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டது. கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரிக்க, தில்லி அரசு மேற்கொண்டு வரும் அதிகரித்த கரோனா பரிசோதனைகளும் காரணமாகும். தில்லி மருத்துவனைகளில் கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 6,800 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,000 படுக்கைகள் காலியாக உள்ளன.
தில்லி அரசு மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தனியாா் மருத்துவமனைகளில் அதிக கரோனா படுக்கைகளை ஒதுக்கி தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிா்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம். தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் சனிக்கிழமை (நவம்பா் 7) தொடங்கி நவம்பா் 30 வரை தில்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பட்டாசுளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றாா் அவா்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த புதன் (அக்டோபா்-28) - ஞாயிறு இடையேயான ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கரோனா பாதிப்பு சற்றுக் குறைந்து 4,001 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதன்கிழமை மேலும் அதிகரித்து, 6,842 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை 6,715 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தொடா்ந்து 3-ஆவது நாளாக தில்லியில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, தில்லியில் தற்போது 38,729 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...