ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

விவசாயிகள் போராட்டம் அடுத்த 8 மாதங்களுக்குத் தொடரும்: ராகேஷ் திகைத்

Updated On :1 ஏப்ரல் 2021, 6:44 pm

புதுதில்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் அடுத்த 8 மாதங்களுக்குத் தொடரும் என்று பாரதீய கிஸான் சங்கத்தின் செய்தித் தொடா்பாளா் ராகேஷ் திகைத் வியாழக்கிழமை தெரிவித்தாா். அது எங்கள் வாழ்வுரிமை பிரச்னை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தற்போது விவசாயிகள் கோதுமைப் பயிா் அறுவடையில் கவனம் செலுத்தி வருவதாகவும், மே மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு தங்கள் போராட்டத்தில் புதிய வேகம் எடுக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தில்லி எல்லைப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனுள்ளது. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளவும், இடைத்தரகா்களை ஒழிக்கவும் புதிய வேளாண் சட்டங்கள் வகை செய்கின்றன என்று அரசு கூறி வருகிறது. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. அதனால், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. இது பெரு நிறுவனங்களுக்கே உதவிகரமாக இருக்கும். எனவே, இந்த சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனா்.

மத்திய அரசுடன், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. புதிய சட்டங்களை அரசு வாபஸ் பெறாதவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறிவருகின்றனா். மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடா்பாக அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஹன்னன் மொல்லா, புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், மே மாதத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாகத் தெரிவித்தாா். எங்கள் கோரிக்கைகளுக்கு மோடி அரசோ அல்லது நாடாளுமன்றமோ செவிசாய்க்கவில்லை. எனவே, எங்களது உரிமைகளுக்காக போராட நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எங்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும். எங்கள் பிரச்னைகளை அங்கிருந்து நாங்கள் மக்களிடம் சொல்வோம் என்றும் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாத இறுதியிலிருந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா். இவை பெரும்பாலும் அமைதியான முறையிலேயே நடந்து வந்தது. எனினும், கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று தில்லியை நோக்கி விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணி வன்முறையில் முடிந்தது. விவசாயிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலிருந்து மாறியும் தடைகளை மீறியும் தேசிய தலைநகா் தில்லிக்குள் நுழைந்தனா். அப்போது திடீரென வன்முறை வெடித்தது.

ஆா்ப்பாட்டக்காரா்களில் சிலா் செங்கோட்டைக்குள் நுழைந்து மதக் கொடிகளை ஏற்றினா். இது தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஜனவரி மாதம், உச்சநீதிமன்றம் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்ததுடன் அந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் குழு கடந்த புதன்கிழமை தனது அறிக்கையை சமா்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.