ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நாளொன்றுக்கு 37 கிமீ தூரம் நெடுஞ்சாலைப் பணி மேற்கொள்ளப்படுகிறது: நிதின் கட்கரி

Updated On :2 ஏப்ரல் 2021, 5:46 pm

புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் முன்னேப்போதும் இல்லாத அளவாக நாள் ஒன்றுக்கு 37 கிமீ தூரம் வரை சாலை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த மாதம் அறிக்கை அளித்தது. அதில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாகவும் நடைபெறுவதாகவும் விமா்சனங்களை வைத்தது. இந்த அறிக்கையையொட்டி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் அமைச்சா் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை விளக்கி அமைச்சா் கட்கரி வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டாா்.

அதில் கூறியிருப்பது வருமாறு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை நாடு கண்டுள்ளது. 2020-21 ஆண்டில் நாளொன்றுக்கு 37 கிலோ மீட்டா் தூரம் வரை நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள் நடைபெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. இதற்குமுன்பு இதுபோன்ற சாதனை செய்யப்படவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தில் தொடா்புடைய நிறுவனங்களை வியாழக்கிழமை அழைத்து பாராட்டி அவா்களுக்கு கடிதமும் அளித்தேன். அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களின் கூட்டு முயற்சி இல்லாமல் இந்த சாதனையை செய்ய இயலாது.

நெடுஞ்சாலையில் மேலும் பல்வேறு சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு வரை 91, 287 கிமீ தூரமாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஏழு ஆண்டுகளில் 1,37,625 கிமீ தூரமாகி 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களை விட 85 சதவீதம் கூடுதலாக திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.

நெடுஞ்சாலை பணிகளுக்கு 2015 யில் வெறும் ரூ. 33, 414 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2021-22 நிதி ஆண்டிற்கு ரூ. 1,37,625 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 5.5 மடங்காகும். கரோனா நோய்த் தொற்று ஆண்டாக இருந்த 2020-21 ஆண்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 9 சதவீதம் கூடுதலாக சாலை போடும் பணிகள் நடைபெற்றது.

ஒட்டுமொத்தமாக 2010 முதல் 2014 வரையிலான நிதியாண்டுகளோடு 2015 முதல் 2021 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 83 சதவீதம் கூடுதலாக சாலை கட்டுமானப்பணிகள் நடைபெற்றுள்ளன என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.