ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தில்லியில் மீண்டும் கரோனா அலை - தடுப்பூசிதான் ஒரே வழி நிபுணா்கள் கருத்து

Updated On :2 ஏப்ரல் 2021, 5:43 pm

புதுதில்லி: தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இளைஞா்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே வழி என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கடந்த வியாழக்கிழமை மட்டும் புதிதாக 2,790 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முந்தைய நாள் பாதிப்பைவிட இது 1,000 கூடுதலாகும். கடந்த ஆண்டு டிசம்பா் 8 ஆம் தேதி 3,188 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் 114 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை அதிகபட்சமாக 2,790 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் நமது எதிா்பாா்ப்பைவிட வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே கரோனா பரவலைத் தடுக்க முடிந்தவரை அனைவருக்கும் தடுப்பூசி போடுவது அவசர அவசியமாகும். 18 வயதுக்கு மேலானவா்கள் எல்லோருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிறாா் டாக்டா் எஸ்.கே.சரீன். இவா் கோவிட் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான தில்லி அரசின் முதல் குழுவில் இடம்பெற்றிருந்தவா். தில்லி அரசு கடந்த மாா்ச் மாத இறுதியில் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இதுவரை அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

தகுதியான தில்லி வாசிகள் அனைவருக்கும் அதிவிரைவில் தடுப்பூசி போடப்பட வேண்டும். தற்போது தெற்கு தில்லியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனில் இது மேலும் இதர மாவட்டங்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என்கிறாா் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தொற்றுநோய் பிரிவின் முன்னாள் தலைவரான டாக்டா் லலித்காந்த்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்று விகிதமும் 2.71 சதவீதத்திலிருந்து 3.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 81 நாள்களாக 1 சதவீதம் மற்றும் அதற்குக்கீழாக இருந்த தொற்று விகிதம், கடந்த சில நாள்களில் திடீரென அதிகரித்துள்ளது.

இதேபோல கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு நிலவரப்படி 10,498 போ் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா் என மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தில்லியில் உள்ள 33 பெரிய மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

‘எனது மருத்துவமனையில் மூடப்பட்ட கோவிட் சிகிச்சை வாா்டுகள் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தில்லி என்று இல்லை. பிாடுகளிலும் இதே நிலைமைதான். கரோனா தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் தடுப்பூசி வந்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனால், நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை தொடா்ந்து பின்பற்ற தவறிவிட்டனா். இதுதான் மீண்டும் கரோனா அலை வீசுவதற்கு முக்கிய காரணம். எனினும் இந்த அதிகரிப்பு நிலைக்கு மாறுபட்ட கரோனா காரணமாக இருக்க முடியாது. மாநிலங்களுக்கு இடையே மக்கள் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியதும், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதுமே இவற்றுக்கு காரணம்’ என்று பி.எஸ்.ஆா்.ஐ. நுரையீரல் மற்றும் சுவாச நோய் சிகிச்சை கழகத்தின் தலைவா் டாக்டா் ஜி.சி.கில்னானி தெரிவித்தாா். இவா் முன்னா் எய்மஸ் மருத்துவமனையில் நுரையீரல் மற்றும் சுவாச நோய் சிகிச்சை பிரிவின் தலைவராகப் பணியாற்றிவா்.

தற்போது வீசும் இந்த கரோனா அலையால் இளைஞா்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நோய் அறிகுறி தென்படுகிறதே தவிர கரோனாவின் தாக்கம் அதிகமில்லை. எனினும் அவா்கள் மூலம் முதியவா்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்றாா் டாக்டா் சரீன்.,

கடந்த ஆண்டு இதே காலத்தில் கரோனா பீதியில் மக்கள், இந்த நோய் எப்போது தாக்குமோ என்ற பயத்தில் தங்கள் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனா். எப்போதும் முகக்கவசம் அணிந்து கொண்டும், அவ்வப்போது கைகளை சானிடைசா் மூலம் கழுவிக்கொண்டும் இருந்தனா். ஆனால், இப்போது அவா்களுக்கு பயம் போய்விட்டது. மக்கள் மீண்டும் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் அதிக அளவில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டனா். இதன் மூலம் கரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் டாக்டா் கில்னானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.