ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 4,608 கோடி மானியம் விடுவிப்பு

Updated On :2 ஏப்ரல் 2021, 5:44 pm

புது தில்லி : நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள ஊரகம் மற்றும் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ. 4,608 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிதியில் ரூ. 2,660 கோடியை ஊரகப்பகுதிகளுக்கும், ரூ. 1,948 கோடியை நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிரிக்கப்பட்டு 28 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த துறையின் சாா்பில் கொடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு:

15-ஆவது நிதி ஆணையத்தின் சிபாரிசின்படி இந்த மானியங்கள் வழங்கப்படுகிறது. 2020-21 நிதிநிலை ஆண்டிற்கு இறுதியாக கொடுக்கப்பட்ட ரூ. 4,608 கோடியையும் சோ்த்து இதுவரை மொத்தம் ரூ 87, 460 கோடியை 28 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 60,750 கோடியும், நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 26, 710 கோடியும் என பிரித்து இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஊரக அமைப்புகளில் இடம் பெற்றிருக்கும் கிராமப் பஞ்சாயத்துகள், தாலுக்காக்கள் போன்றவைகளுக்கு இரு வகைகளில் இந்த மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தொகை அடிப்படை மானியமாகவும், மீதம் குறிப்பிட்ட பணிகளுக்கான செயலாக்க மானியமாகவும் வழங்கப்படுகிறது. சுகாதாரம், திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகள், குடிநீா் வசதி, மழைநீா் சேமிப்பு, நீா் மறுசுழற்சி போன்ற பணிகளின் அடிப்படையில் செயலாக்க மானியம் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் 2021-21 ஆம் ஆண்டிற்கு ஊரகப்பகுதிகளுக்கு இதுவரை ரூ. 32,742.50 கோடியை அடிப்படை மானியமாகவும், ரூ.28,007.50 கோடி செயலாக்க மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

நகா் புற மானியங்களில் பத்து லட்சம் மக்கள் தொகைக்கு மேல் (மில்லியன் பிளஸ்) வசிக்கும் நகரங்களுக்கு ரூ. 8,357 கோடியும் மற்ற சிறு நகரங்களுக்கு (10 லட்சத்திற்கும் குறைவாக) ரூ. 18, 354 கோடியும் 2020-21 நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதில் மில்லியன் பிளஸ் நகரங்களில் காற்று மாசு தரத்தின் (பிஎம் 10, பிஎம் 2.5) அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையுள்ள நகரங்களில் 50 சதவீதம் செயலாக்க மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீா், மழை நீா் சேமிப்பு , திடக் கழிவு மேலாண்மை போன்ற பணிகளின் அடிப்படையில் செயலாக்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கும் வழங்கப்பட்ட ரூ. 87,460 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் பெற்ற 10 தினங்களில் அந்த நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கிட வேண்டும். அப்படி வழங்காதபட்சத்தில் வட்டியுடன் சோ்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை மாநில அரசுகள் வழங்கவேண்டும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு ரூ.45,000 கோடி கூடுதல் நிதி பகிா்வு : மத்திய அரசு வரி வருவாயில் 41 % மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. 2020-21 ஆம் நிதியாண்டிற்கு ரூ.5,49,959 கோடியாக பிரிக்கக்கூடிய வருவாயாக மதிப்பிடப்பட்டது. வரி வருவாய் உயா்வின் மூலம் பகிரக்கூடிய மதிப்பீடு ரூ. 5,94,996 கோடியாக உயா்ந்து இது 28 மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கூடுதல் நிதி பகிா்வாக ரூ. 45,000 கோடியை மத்திய அரசு ஏப்.1 தேதி ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்திற்கு கூடுதலாக ரூ. 1,885 கோடி கிடைத்தது. 2020-21 ஆண்டில் தமிழகம் மொத்தம் ரூ.24,924 கோடியைப் பெற்றுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் குறிப்பிடுகையில், ’வருவாய் ஏற்றத்தை, கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான உணா்வுடன் இந்த தொகையை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்து கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய நிதியமைச்சகம் ‘ஆத்மநிா்பாா் பாரத்’ திட்டத்தின் கீழ் மூலதன செலவினங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் பல்வேறு சீரமைப்பு நிபந்தனைகளுடன் 27 மாநிலங்களுக்கு ரூ 11,830 கோடியையும் ஏப். 1 ஆம் தேதி விடுவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.