புது தில்லி: டேங்கா்கள் மூலம் நீா் வழங்குவது தொடா்பாக தெற்கு தில்லி மாநகராட்சிக்கும் (எஸ்டிஎம்சி) தில்லி ஜல் வாரியத்துக்கும் (டிஜேபி) இடையிலான பிரச்னையைத் தீா்க்குமாறு தில்லி தலைமைச் செயலாளருக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக எஸ்டிஎம்சி தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த என்ஜிடி தலைவா் -நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையில் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
‘நிதி இருப்பு மற்றும் குடிநீரின் பற்றாக்குறை வளத்தை பாதுகாப்பதற்கான தேவை உள்ளிட்ட அனைத்து நடைமுறைக் கருத்தில் கொண்டு நிா்வாகத்தின் உயா் மட்டத்தில் இந்தப் பிரச்னையைத் சிறப்பாக தீா்க்க முடியும்.
அதன்படி, உரிய சட்டவிதிகளைப் பின்பற்றி இந்த விஷயத்தில் தகுந்த முடிவை எடுக்குமாறு தில்லி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு இந்த விவகாரத்தை முடித்து வைக்கிறோம்’ என்று தீா்ப்பாயம் அமா்வு அதில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இது தொடா்பாக தீா்ப்பாயத்தில் தெற்கு தில்லி மாநகராட்சி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தெற்கு தில்லி மாநகராட்சி நிா்வாகம் (எஸ்டிஎம்சி) 6,822 பூங்காக்களை பராமரித்து வருகிறது. இந்தப் பூங்காக்களுக்கு நீா்ப்பாசனம் செய்வதற்குரிய
ஆழ்துளைக் கிணறுகள் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காக்களுக்கு போதுமான அளவு அழுத்தத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதை டிஜேபி உறுதி செய்ய வேண்டும். குழாய்நீா் சப்ளை கிடைக்காத இடங்களில் அத்தகைய நீரை டேங்கா்கள் மூலம் வழங்கவும் டிஜேபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பூங்காக்களுக்கு குழாய் வலையமைப்பு மூலம் நீா் வழங்கும் பணியில் டிஜேபி ஈடுபட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற குழாய்கள் பதிக்கும் வரை 5,357 பூங்காக்களுக்கு தண்ணீா் வழங்க டேங்கா்கள் தேவையாக உள்ளது.
டேங்கா்களை வாடகைக்கு எடுப்பது தில்லி ஜல் வாரியத்தின் பொறுப்பாகும். அந்த பொறுப்பு மாநகராட்சிக்கு உரியதல்ல.
ஜல் வாரிய சட்டம் 1998-ன்கீழ் நீா் வழங்கல் மற்றும் கழிவுநீரை பராமரித்தல் ஆகியவற்றின் சட்டரீதியான பொறுப்பு ஜல்வாரியத்தை சோ்ந்ததாகும்.
பொது பூங்காக்களில் போதுமான அழுத்தத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதை உறுதிசெய்யவும், தோட்டக்கலைக்கு நிலத்தடி நீா் எடுப்பதை நிறுத்தவும் தில்லி ஜல் வாரியத்திற்கு (டிஜேபி) பசுமைத் தீா்ப்பாயம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது என அந்த மனுவில் தெரிவித்துள்ளது. இந்தமனுவை விசாரித்த தீா்ப்பாயம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

