தில்லியில் புதிதாக 3,594 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது. தொடா்ந்து இரண்டாவது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 3,500 -ஐத் தாண்டியுள்ளது. கரோனாவுக்கு மேலும் 10 போ் பலியாகியுள்ளனா். கரோனா தொற்று விகிதம் 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து தில்லியில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 6.72,381 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலியானோா் எண்ணிக்கை 11,060 ஆக உயா்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 3,500 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இது தினசரி கரோனா பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
கரோனா தொற்று விகிதம் 4.11 சதவீதத்திலிருந்து 4.48 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.
கடந்த ஆண்டு டிசம்பா் 3 ஆம் தேதி தில்லியில் 3,734 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இது டிசம்பா் 4- ஆம் தேதி 4,067 ஆக திடீரென அதிகரித்தது.
கடந்த வியாழக்கிழமை பாதிப்பு 2,790 ஆகவும், புதன்கிழமை 1,819, செவ்வாய்க்கிழமை 992 , திங்கள்கிழமை 1,904 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1881 என்ற அளவிலும் பாதிப்பு இருந்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை முன்பு 11,994 என்ற அளவில் இருந்தது இப்போது 12,647 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மொத்தம் 79,617 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் 57,296 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையில் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுத் தனிமையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 6,106 என்பதிலிருந்து 6,569 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

