நாட்டிலுள்ள நீதிமன்றங்களை மின்னணுமயமாக்குவது தொடா்பாக மூன்றாம் கட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட தொலைநோக்கு திட்டத்திற்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை சட்ட வல்லுநா்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய சட்டம், நீதித்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய நீதிமன்றங்களுக்கு, 2005 -ஆம் ஆண்டு, தகவல் தொடா்பு தொழில்நுட்ப தேசிய கொள்கை அறிவிக்கப்பட்டது. இதை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மின் - குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட இந்தக் குழக்கள் முதல் இரண்டு கட்ட மின்னணு நீதிமன்ற வரைவு திட்டங்களை வழங்கி அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து. உச்சநீதிமன்ற நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையில் மூன்றாம் கட்ட மின்னணு-நீதிமன்ற வரைவு திட்டத்தைத் தயாரிக்க மின்னணு குழு அமைக்கப்பட்டது. அது தனது வரைவு ஆவணத்தை சனிக்கிழமை வெளியிட்டது.
இது தொடா்பாக நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்காடுபவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்கள் கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இவை கவனத்தில் கொள்ளப்பட்டு மூன்றாம் கட்ட மின்னணு - நீதிமன்றத் திட்டம் இறுதி முடிவு செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

