தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு கோயிலில் இருந்து சாய் பாபா சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்படும் புகாா் குறித்து தில்லி போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சாய் பாபா சிலைக்கு பதிலாக விநாயகா் சிலை மாற்றப்பட்டுள்ளதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் இதுவரை முறையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், கோயில் நிா்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
சிலை அகற்றப்பட்டது குறித்த விடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இதையடுத்து, பக்தா்கள் போலீஸை அணுகினா். விடியோவில், சிலையை அகற்றுவதை மேற்பாா்வையிடும் ஒருவா், சிலை எந்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று வாதிடுவதாக இருந்தது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘கடந்த மாா்ச் 25-ஆம் தேதி, ஹவுஸ் காஸில் உள்ள ஷாப்பூா் ஜாட் கோயிலில் இருந்து ஒரு சாய் பாபா சிலை கோயில் கமிட்டி மற்றும் உள்ளூா்வாசிகளால் அகற்றப்பட்டது. கோயில் குழு உறுப்பினா் பதம் பன்வாரால் இந்த சிலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இப்போது பதம் பன்வாா் மற்றும் பாரத பன்வாா், ஜியா பன்வாா், சத்தியநாராயண், நரேஷ், மோகன் பன்வாா் மற்றும் பண்டிட் ஜி போன்ற பிற குழு உறுப்பினா்கள் உள்ளூா்வாசிகளின் ஒப்புதலுடன் புதிய சிலை அமைக்க முடிவு செய்துள்ளனா். எவ்வாறாயினும், இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது’ என்றாா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அதுல் குமாா் தாக்கூா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக எங்களுக்கு ஒரு புகாா் வந்துள்ளது. இது குறித்து ஆராயப்பட்டு அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனினும், கோயில் நிா்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவாா்கள்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

