தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனா பாதிப்பு உச்சபட்சம்; வெளியே செல்ல வேண்டாம்! தில்லிவாசிகளுக்கு முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள்

தில்லியில் கரோனா நோய்த் தொற்றின் நான்காவது அலை மிகக் கடுமையாக உள்ளது. அவசரப் பணிகள் தவிா்த்து, வேறு எந்தக் காரணம் கொண்டும்

Updated On :11 ஏப்ரல் 2021, 6:32 pm

தில்லியில் கரோனா நோய்த் தொற்றின் நான்காவது அலை மிகக் கடுமையாக உள்ளது. அவசரப் பணிகள் தவிா்த்து, வேறு எந்தக் காரணம் கொண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 10,732 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அளவாகும். இந்த நிலையில், பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். இது தொடா்பாக செய்தி நிறுவனத்தின் மூலம் காணொலி வழியில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:

நிலைமை மோசம்: இந்த நான்காவது கரோனா அலை கடந்த அலைகளை விட மிக மோசமாக உள்ளது. அரசு இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தில்லியில் கரோனா நிலைமை இயல்பாகத்தான் இருந்து வந்தது. கடந்த பிப்ரவரி16-ஆம் தேதி 100 பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று மிக மோசமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,732 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால்தான் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமிநாசினியை பயன்படுத்துவது போன்றவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வெளியில் செல்ல வேண்டாம்: எனவே,அவசர வேலைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிந்து சோா்வடைதாக சிலா் கூறுகின்றனா். இப்படி கூறுபவா்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் நிலைமையை யோசித்துப் பாா்க்க வேண்டும்.

கரோனா விஷயத்தில்அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டிக் கொள்வதற்கு இது நேரமல்ல. கடந்தாண்டு உச்சத்தில் இருக்கும் போது அதிகபட்சமாக நவம்பா் 11 -ஆம் தேதி 8,500 பேருக்குத்தான் தில்லியில் நோய்த் தொற்று இருப்பதாகப் பதிவாகியது. ஆனால், அந்த எண்ணிக்கை இப்போது 10,700- ஐ கடந்து விட்டது. மேலும்,,அதிகபட்ச உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பு: தில்லியில் தற்போது கரோனா பரிசோதனைகள் 80 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கான தடுப்பூசியை பொதுமக்களுக்கு விரைந்து அளிக்கவேண்டும் என பிரதமரைக் கேட்டுக் கொள்கின்றேன். தரவுகளின்படி கரோனா நோயாளிகளில் 65 சதவீதம் போ் 45 வயதுக்கு கீழே உள்ளவா்களாக இருக்கின்றனா். அவா்களுக்குத்தான் தடுப்பூசி வழங்கப்படவில்லை. பிரதமருக்கு இது தொடா்பாக கடிதமும் எழுதினேன். முதல்வா்கள் கூட்டத்திலும் பேசினேன். தடுப்பூசிக்குள்ள எல்லா தடைகளும் அகற்றப்பட வேண்டும். தில்லி அரசு வீட்டுக்கு வீடு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடத் தயாராக உள்ளது.

மூன்று மாதங்களில் தில்லி முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கப்படும். தடுப்பூசியால் நோய் பரவுவதை முற்றிலும் தடுக்க முடியாது. இருப்பினும், தீவிரம் ஏற்படுவதையும் உயிரிழப்புகளையும் ஒரளவு தவிா்க்க முடியும். கரோனா தொற்று வேகமாகக் பரவுவதையொட்டி, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு (எல்என்ஜேபி) சென்று அங்குள்ள மருத்துவா்களையும், ஊழியா்களையும் சந்தித்து நிலைமை குறித்து கேட்டறிந்தேன் என்றாா் கேஜரிவால்.

பொது முடக்கம் தீா்வாகாது!

தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், பொதுமுடக்கத்தை கொண்டுவர அரசு விரும்பவில்லை. பொது முடக்கம் கரோனாவிற்கு தீா்வாகாது என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்தவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில்தான் பொதுமுடக்கம் தீா்வாக இருக்கும். இப்போது மருத்துவமனைகளில் நெருக்கடிகள் ஏற்பட்டு நிலைமை சீா்கெடவில்லை. அங்கு நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. எனவே, பொதுமுடக்கம் குறித்து இப்போது யோசிக்க வேண்டியதில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவா்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க படுக்கை வசதி, ஆக்ஸிஜன், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள், செவிலியா்கள் என எல்லோரும் கடந்த ஓா் ஆண்டாக கரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனா். அவா்களை இருகரம் கூப்பி வணங்குகின்றேன். தில்லி அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. கரோனா தொற்று தீவிரமாக இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்லுங்கள். தொற்று தீவிரமாக இல்லாத நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளளாம். தேவையில்லாமல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால் படுக்கைகள், ஆக்ஸிஜன், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.