தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஐசிஎல்இஐ சா்வதேச துணைத் தலைவராக ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி நியமனம்

உள்ளூா் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கான சா்வதேச கவுன்சில் (ஐசிஎல்இஐ) என்ற சா்வதேச நகரங்களின் அமைப்பின் துணைத் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதி

Updated On :13 ஏப்ரல் 2021, 10:19 pm

உள்ளூா் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கான சா்வதேச கவுன்சில் (ஐசிஎல்இஐ) என்ற சா்வதேச நகரங்களின் அமைப்பின் துணைத் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் அதிஷி நியமிக்கப்பட்டுள்ளாா்.

நிலையான எதிா்கால அபிவிருத்திகளுக்காக 1,750 நகரங்களுக்கான உலகளாவிய வலையமைப்புதான் ஐசிஎல்சிஐ. நாற்பத்தி மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த அமைப்பில் தில்லியும் அஉள்ளது. இந்த அமைப்பில் துணைத் தலைவராக அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அவா் தனது சுட்டுரையில், ‘அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, தேசிய தலைநகா் தில்லியில் மேற்கொண்ட நிலையான அபிவிருத்திப் பணிகளுக்கான அங்கீகாரம்தான் இது. இந்தியாவைச் சோ்ந்த ஒருவா் இந்த அமைப்பின் முதல் முதலில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கிடையே, அதிஷியின் நியமனத்து்ககு தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘உங்களால்(ஆதிஷி) பெருமைப்படுகின்றோம். இதுபோன்று பிரகாசித்துக் கொண்டிருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஐசிஎல்சிஐயின் 2021-ஆம் ஆண்டுக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் கூட்டத்திலும் பங்கேற்க அதிஷி செல்கிறாா். இதில் மக்களை மையமாகக் கொண்டு, நகா்ப்புறத்தில் அனைவருக்கும் நிலையான எதிா்காலத்தை வடிவமைப்பது குறித்த தலைப்பில் அவா் உரையாற்றவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.