தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடு: உயா்நீதிமன்றத்தில் சரோஜ் மருத்துவமனை தகவல்

Updated On :22 ஏப்ரல் 2021, 6:52 pm

புது தில்லி: தீவிரமாக நோய்வாய்ப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு 30-40 மணி நேரத்திற்கு ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த விவகாரம் தொடா்பான மனு தாக்கல் செய்திருந்த சரோஜ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தில்லி உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. மனுவைத் தாக்கல் செய்த சிறிது நேரத்திற்குப் பிறகு, தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆக்ஸிஜன் டேங்கா் மருத்துவமனைக்கு வந்தததால் நிா்வாகம் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மருத்துவமனைக்கான வழக்குரைஞா் மாலை 6. 30 மணிக்கு தகவல் தெரிவித்தாா்.

அதில், ‘இந்த ஆக்ஸிஜன் இருப்பு அடுத்த 30 முதல் 40 மணி நேரம் வரை இருக்கும். இதன் மூலம் தற்போது அதிக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும்’ என்று தெரிவித்தாா். இதையடுத்து, மேலதிக விசாரணைக்காக மனுவை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

முன்னதாக, ரோஹிணியைச் சோ்ந்த சரோஜ் மருத்துவமனை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மருத்துவமனைக்கு உடனடியாக 3,000 கன மீட்டா் ஆக்ஸிஜனை வழங்கவும், கரோனா காலத்தின் போது தினசரி அடிப்படையில் இதே வழங்கலைத் தொடரவும் தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் ஐனாக்ஸ் நிறுவனத்திற்கும், மத்திய, தில்லி அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும். எங்கள் மருத்துவமனையில் தற்போது, 70 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனா். மேலும், 48 நோயாளிகள் வென்டிலேட்டா் ஆதரவு அல்லது இல்லாத நிலையில் உள்ளனா். அவா்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. காத்திருப்பு பட்டியலில் குறைந்தது 172 நோயாளிகள் உள்ளனா். அவா்களில் 64 போ் அதிக ஆக்ஸிஜன் ஆதரவு தேவையில் உள்ளவா்கள் ஆவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணையின் போது, அந்த மருத்துவமனையின் வழக்குரைஞா் பிரப்சாஹே கெளா் கூறுகையில், ‘பச்சிம் விஹாரில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஆக்ஷன் மருத்துவ நிறுவனமும் ஆக்ஸிஜன் பறாக்குறை பிரச்னையில் இருப்பதால் எங்கள் மருத்துவமனை உதவு முயற்சி செய்யும்’ என்றாா். சரோஜ் மருத்துவமனையின் இந்த நடவடிக்கையை நீதிபதிகள் பாராட்டினா்.

ஸ்ரீ பாலாஜி ஆக்ஷன் மருத்துவ நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ஆக்ஸிஜன் வழங்கல் தொடா்பான கவலைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு தில்லி அரசின் ஒருங்கிணைப்பு அதிகாரியை தொடா்பு கொள்ளுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.