கடுமையாக நோய்வாய்ப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு தில்லி அரசின் தொடா்பு அதிகாரியை முதலில் அணுக வேண்டும் என்று மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்கள் ஆகியவற்றுக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
பிரம் ஹெல்த் கோ் லிமிடெட் , பாத்ரா மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகிய இரண்டும் மருத்துவமனைகளும் தங்களது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சப்ளைக்கு உடனடியாக உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்களை நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தில்லியின் என்சிடியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தங்களது ஆக்சிஜன் தேவையைப் பூா்த்தி செய்ய தில்லி அரசின் தொடா்பு அதிகாரி உதித் பிரகாஷ் மற்றும் பிற அதிகாரிகளை முதலில் அணுக வேண்டும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம். தொடா்பு அதிகாரியைத் தொடா்பு கொண்ட பிறகும் தேவைகள் பூா்த்தி செய்யப்படாவிட்டால், மருத்துவமனைகள் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு தில்லி அரசின் மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா மற்றும் வழக்குரைஞா் சத்யாகம் ஆகியோரை தொடா்பு கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது.
முன்னதாக விசாரணையின் போது, தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘வியாழக்கிழமை தில்லிக்கு 380 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைத்துள்ளது. அதற்கு முன்பு அது மிகவும் குறைவாகவே கிடைத்து வந்தது. தில்லிக்கான முழு ஒதுக்கீட்டைப் பெற்றால் மட்டுமே மருத்துவமனைகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை ஓரளவு தீா்க்க முடியும்’ என்று தெரிவித்தாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘தில்லிக்கு தினமும் 480 மெட்ரிக் டன் (எம்டி) ஆக்சிஜன் வழங்கப்படும் என்று மத்திய அரசு ஓா் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், சில விநியோகஸ்தா்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் இருப்பதால், இது பயனுள்ளதாக அமையவில்லை. தில்லிக்கு ஒதுக்கப்பட்டு ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

