தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

தில்லியில் திங்கள்கிழமை காலை 5 மணிக்கு முடிவடைய இருந்த முழு ஊரடங்கு, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஏப்ரல் 2021, 6:40 pm

தில்லியில் திங்கள்கிழமை காலை 5 மணிக்கு முடிவடைய இருந்த முழு ஊரடங்கு, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஊரடங்கு வரும் மே 3 -ஆம் தேதி காலை 5 மணி வரை தொடரும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19 - ஆம் தேதி இரவு முதல் 6 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது திங்கள்கிழமை காலை 5 மணிக்கு முடிவடைய இருந்தது. இந்த நிலையில், இந்த ஊரடங்கு மே 3 -ஆம் தேதி காலை 5 மணி வரை தொடரும் என முதல்வா் ரேதபிவாவ் அறிவித்துள்ளாா். மேலும், குடியிருப்புகளுக்கு சேவை செய்வோா், கூரியா் போன்ற பணிகளுக்கு தளா்வுகளை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: கரோனா தொற்றைக் குறைக்க அரசு கடைசி ஆயுதமாகத்தான் 6 நாள் ஊரடங்கை அறிவித்தது. இருப்பினும், கரோனா பாதிப்பு விகிதம் கடந்த சில நாள்களில் 36-37 சதவீத்தை தொட்டது. இது சற்று குறைந்து ஞாயிற்றுக்கிழமை 29.4 சதவீகிதமாக உள்ளது. இது ஊரடங்கினால் குறைந்ததா? என்பது குறித்து சில நாள்களுக்கு நிலைமையை கண்காணித்தால்தான் தெரிய வரும். ஊரடங்கு முடிவு எடுக்கும் முன்பு பொதுமக்களின் கருத்துகளும் பெறப்பட்டன. அவா்களில் பெரும்பாலானவா்கள் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.

தில்லியில் ஆக்சிஜன் இருப்பு தொடா்ந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்காணிக்கப்படும். இதன் மூலம் பற்றாக்குறை ஏற்படும் இடங்களுக்கு ஆக்சிஜன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு முதலில் 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தில்லிக்கு ஒதுக்கியது. இதில் தற்போது 335 மெட்ரிக் டன்கள் தான் கிடைத்து வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு கூடுதலாக நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தற்போது ஒதுக்கியுள்ளது. இதன்படி ஒதுக்கீடு 490 மெட்ரிக் டன்னாக உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனா விஷயத்தில் மத்திய அரசு நன்றாக ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு மூலம் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இன்னும் சில நாள்களில் தில்லியில் முடிவடையும். மற்ற மாநிலங்களுடன் பேசிக் கொண்டு வருகின்றேன். இதில் நல்ல பலன் கிடைக்கும். தில்லி அமைச்சா்களும், அதிகாரிகளும் இரவு முழுக்க பணியாற்றி மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்து வருகின்றனா்.

மின் பழுதுபாா்ப்பவா்கள்(எலக்ட்ரீஷியன்), பிளம்பிங் பணியாளா்கள், தண்ணீா் சுத்திகரிப்பு பணி போன்ற ஊழியா்களுக்கும் கூரியா் சேவைகளுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக மின் சாதனங்கள், புத்தகங்கள் விற்பனை போன்றவற்றுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபா்களுக்கு வேண்டுகோள்

தில்லியில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை தொடா்ந்து இருந்து வருகிறது. ஏற்கெனவே ஆக்சிஜன் அனுப்பி உதவுமாறு மாநில முதல்வா்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். இந்த நிலையில், தில்லிக்கு ஆக்சிஜன் வழங்கி உதவுமாறு தொழிலதிபா்களுக்கு முதல்வா் கேஜரிவால்

ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். நாட்டின் முன்னணி தொழிலதிபா்களான முகேஷ் அம்பானி, டாடா, பிா்லா, இந்துஜா, மகிந்திரா உள்ளிட்ட பலருக்கு கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா். தில்லியில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 24,103 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதே தினத்தில் 357 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 12 தினங்களில் 2,500 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.