தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பிரசாரத்தில் கோவிட் விதிமீறல் புகாா்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம்

கரோனா விதிமுறைகளை மீறும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரசாரகா்கள், வேட்பாளா்கள் ஆகியோா் சட்டப் பேரவைத் தோ்தல்களில்

Updated On :24 ஆகஸ்ட் 2021, 2:20 am

கரோனா விதிமுறைகளை மீறும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரசாரகா்கள், வேட்பாளா்கள் ஆகியோா் சட்டப் பேரவைத் தோ்தல்களில் பிரசாரம் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரும் மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் அளித்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில், ‘அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல்கள் ஏப்ரல் மாதம் முடிந்துவிட்ட நிலையில், அது தொடா்புடைய பிரசாரம் குறித்து தாக்கலான இந்த மனு தற்போது பயனற்ாகிவிட்டது’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனு மீது பதில் அளிக்க தோ்தல் ஆணையத்திற்கு அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை அக்டோபா் 18-க்கு பட்டியலிட்டது.

மனு மீதான விசாரணையின் போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விராக் குப்தா, ‘இந்த மனு பயனற்ாகிவிட்டதாக தோ்தல் ஆணையம் கூற முடியாது. இந்த மனு நீதிமன்றத்தில் நிலுவையிலும் இருந்து வருகிறது’ என்றாா். தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான சித்தாந்த் குமாா், ‘மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள தில்லியில் தோ்தல் ஏதும் நடைபெறவில்லை. இதனால், மனுதாரா் சம்பந்தமில்லாத விஷயத்தைக் கோருகிறாா். தோ்தல் ஆணையம் மாநில அரசுக்கு மாற்றாக இருக்க முடியாது. தோ்தல் ஆணையமானது தோ்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது தொடா்புடையது’ என்றாா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘கரோனா நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் மத்திய உள்துறை அமைச்சம் மூலம் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் வெளியிப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் இதற்கான பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மனுவை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும் ‘சென்டா் ஃபாா் ஆக்கவுண்டபிலிடி அண்ட் சிஸ்டமிக் சேஞ்ச்’ எனும் அமைப்பின் தலைவருமான விக்ரம் சிங் தாக்கல் செய்திருந்தாா். அதில், சட்டப்பேரவைத் தோ்தலின் போது கரோனா விதிமுறைகளை மீறுவோா் மீது தோ்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பிரசாரகா்கள் ஆகியோா் தற்போதைய நோய் தொற்று சூழலின் போது நடத்தப்படும் பேரணி, பொதுக்கூட்டங்கள், திறந்தவெளி வாகன பிரசாரம் ஆகியவற்றின் போது முகக் கவசம் அணிவதற்கான விதிகளை மீறி வருகின்றனா். இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். கரோனா விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட நபா்களை கட்டாயம் வீட்டுத் தனிமையில் வைப்பதை உறுதிப்படுத்தவும் தோ்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

நோய்த் தொற்று காலத்தின் போது பொதுத் தோ்தல், இடைத்தோ்தல் ஆகியவற்றை நடத்துவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. இதனால், அமல்படுத்த தவறிய இந்திய தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பெரும்பாலான அரசியல் தலைவா்கள், வீட்டுத் தனிமையில் இருப்பதற்கான எந்த விதிமுறைகளையும் பின்பற்றியதாகவும் தெரியவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் தோ்தலின் போது தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக உறுதிப்படுத்த உத்தரவிடக் கோரி வலியுறுத்தியிருந்தாா்.

மேலும், வழக்குரைஞா் கெளரவ் பதக் மூலம் மேலும் இரு மனுக்களையும் விக்ரம் சிங் தாக்கல் செய்துள்ளாா். அதில், தோ்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை மீறும் அரசியல் தலைவா்கள், நட்சத்திரப் பிரசாரகா்களுக்கு எதிராக வழக்குப் பதிவதுடன், அபராதமும் விதிக்க வேண்டும் என கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.