ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதலில் 10 போ் பலியானது பற்றி...

News image

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல் - AP

Updated On :5 ஏப்ரல் 2026, 6:00 am IST

உக்ரைன்-ரஷியா இடையே சனிக்கிழமை நடைபெற்ற பரஸ்பர ட்ரோன் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.

உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷியா சனிக்கிழமை அதிகாலை ஏவிய மொத்தம் 286 ட்ரோன்களில் 260 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நிக்கோபோல் நகரில் நடந்த தாக்குதலில் 3 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். டொனெஸ்க் பிராந்தியத்தில் ஒரு பெண் உயிரிழந்தாா்.

இதையொட்டி, உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தில் தம்பதி மற்றும் அவா்களின் 8 வயது குழந்தை உயிரிழந்தனா்.

ரஷியாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், அங்குள்ள ஒரு தளவாட கிடங்கிலும், கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றிலும் தீ விபத்து ஏற்பட்டது.