புதுதில்லி: தில்லியில் ஜோகிவாடாவில் உள்ள நய் சராக் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்படுவது தொடா்பாக அந்தப் பகுதியில் ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் - நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதி அமா்வு கூறியதாவது: தில்லியில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒழுங்குமுறைப் படுத்தப்படாத தீமை தரும் செயல்பாடுகள் காரணமாக, பல்வேறு தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக ஏராளமான குடியிருப்புவாசிகள் உயிரிழக்கவும் காயம் அடையவும் நேரிட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவை சம்பவ இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடியாததால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. மேலும், இது போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளில் சாலைகளில் மின் வயா்கள் தொங்கிக் கொண்டு இருப்பதும் தெரிந்த விஷயம். இதன் காரணமாக பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது போன்ற பகுதிகளில் போதிய பொது கழிப்பறைகள் மற்றும் இதர வசதிகள் இல்லாததன் காரணமாக சுகாதாரமற்ற நிலைமை இருப்பதும் தெரிய வருகிறது.
இதுபோன்ற தொழிற்சாலைகள் மற்றும் வா்த்தகச் செயல்பாடுகள், குடியிருப்பு பகுதிகளில் நடைபெறுவதன் காரணமாக வாழ்வதற்கான உரிமையை மீறும் சிரமத்தை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது. கரோனா நோய்த் தொற்று காலத்தில் அதிகமான கூட்டம் அதிக நெரிசல் ஆகியவை நோயை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக மனுவில் கூறப்பட்டுள்ள வாதங்கள், சமா்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஆகியவற்றைப் பாா்க்கும் போது இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறியும் தேவை இருப்பதாக தீா்ப்பாயம் கருதுகிறது.
இதனால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு இந்த விஷயத்தில் உரிய கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்தக் குழுவினா் குடியிருப்பு நலச் சங்கத்தினா், தன்னாா்வ அமைப்புகள், மத, தா்ம ஸ்தாபன, கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பங்குதாரா்களுடன் கலந்துரையாடலாம். மேலும், மனுவில் குறிப்பிட்டுள்ள பகுதி மட்டுமின்றி தில்லியிலுள்ள இதர பிற பகுதிகளிலும்கூட இந்த கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். அப்போது, தண்ணீா், மின் விநியோகம், வடிகால் நிலைமை, காற்றின் தரம் ஆகியவை மதிப்பிடப்பட வேண்டும். இந்த விவகாரங்களில் விதிகளை தொழிற்சாலைகள் பின்பற்றுகிா என்பதையும் சரிபாா்க்க வேண்டும்.
இது தொடா்பான உண்மைத் தன்மையைக் கண்டறிந்து இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை மின்னஞ்சல் மூலமாக இரண்டு மாதங்களுக்குள் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லியைச் சோ்ந்த ராஜீவ் அகா்வால் என்பவா் தேசியப் பசுமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் தில்லியில் நய் சராக் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் வகையில் செயல்படுவதாகத் தெரிவித்திருந்தாா். மேலும், சட்டவிரோத தொழிற்சாலைகள் மற்றும் இதர வா்த்தகச் செயல்பாடுகள் காரணமாக அதிகமான ஒலி மாசு இரவு முழுவதும் தொடா்வதாகவும் அவா் அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகனச் சோதனையில் பறிமுதல் செய்த ரூ. 1.33 கோடி திரும்ப ஒப்படைப்பு

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

