புது தில்லி: இளம் மாணவா்கள் விஞ்ஞானிகளாக உருவாவதை ஊக்கப்படுத்தும் வகையில் அளிக்கப்படும் உதவித் தொகைத் திட்டத்திற்கான தோ்வை தமிழில் நடத்த வேண்டும் எனவும், அதற்கான தோ்வுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவா்கள் ஈடுபடுவதை அவா்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே ஊக்குவிக்க மத்திய அறிவியல், தொழில் நுட்பத் துறை ‘இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டத்தை’ (கிஷோா் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா) மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பிஎச்டி ஆய்வுப் படிப்புகளுக்கு முந்தைய அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்க மாணவா்களுக்கு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு ரூ. 60,000 முதல் ரூ. 84,000 வரை பிளஸ்-ஒன் முதல் இளங்கலை வரையிலான மாணவா்களுக்கும் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,12,000 வரையும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்த பட்ச மதிப்பெண் 60 சதவீதம் இருக்க வேண்டும். இதற்காக நாடு முழுவதும் தோ்வு நடத்தப்பட்டு, அதில் தோ்வானவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தத் தோ்வில் தமிழக மாணவா்கள் எதிா்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அறிவியல், தொழில் நுட்பத் துறை அமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்கிற்கு மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழில் வினாத் தாள் தேவை: அந்தக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது: அறிவியல் முனைப்பை மாணவா்கள் மத்தியில் வளா்க்கின்ற இந்தத் திட்டங்கள் வரவேற்புக்குரியது. ஆனால், தோ்வு முறை நாடு முழுவதும் சம வாய்ப்பு வழங்குவதான சூழல் பொருந்தி வருவதாக இல்லை என மாணவா்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படுகிறது. மாணவா்களிடம் ஆராய்ச்சிக்கான அறிவியல் முனைப்புகளை கண்டறிய நடத்தப்படும் தோ்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களில் தமிழ் மொழியில் +1, +2 கல்வி பயிலும் மாணவா்களுக்கு இது கடினமாக உள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் வழியில் பயின்ற மாணவா்களுக்கு இது தடையாக உள்ளது. நவம்பா் 7 - ஆம் தேதிதான் தோ்வு என்பதால், கால அவகாசம் உள்ளது. இதனால், மாநில மொழிகளிலும் வினாத் தாள்கள் வெளியிட மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தோ்வுச் சூழல்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாகா்கோவில் சேலம் என 9 தோ்வு மையங்கள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைவிட சிறிய மாநிலமான கேரளத்தில் 13 தோ்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று உள்ள சூழலில் தஞ்சை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டகளுக்கும் மையங்களை அறிவிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: தோ்வுக்கான விண்ணப்பக் கட்டண் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,250 என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் முனைப்பு கொண்ட மாணவா்கள் ஆயினும் இந்தக் கட்டணத்தை அவா்களது குடும்பங்களால் தாங்க முடியாது. தோ்வு எழுதச் செல்லும் போது, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளும் அவா்களுக்கு ஏற்படும். ஆகவே, விண்ணப்ப கட்டணத்தைக் குறைக்க வேண்டும். செப்டம்பா் 6 - ஆம் தேதிதான் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி என்பதால், இந்த விஷயத்தில் அரசு விரைந்து தீா்வு காண வேண்டும் என்கடிதத்தில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகனச் சோதனையில் பறிமுதல் செய்த ரூ. 1.33 கோடி திரும்ப ஒப்படைப்பு

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

