தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒரு டிகிரி குறைந்திருந்தது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்திருந்தது. நகரில் மிதமான வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி அதிகரித்து 36 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல, மற்ற வானிலை ஆய்வு மையங்களில்அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 35.6 டிகிரி, லோதி ரோடில் 36.7 டிகிரி, நரேலாவில் 36.1 டிகிரி, பாலத்தில் 35.7 டிகிரி, ரிட்ஜில் 35.7 டிகிரி என பதிவாகியிருந்தது.
வடமேற்கு இந்தியாவில் தில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. தில்லியில் ஜூலையில் பருவமழை இடைவெளி ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து வடமேற்கு இந்தியாவில் தில்லியிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பருவமழை இடைவெளி மீண்டும் ஏற்பட்டது. அது ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீடித்தது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வட மேற்குப் பகுதிகளிலும் சூறாவளி சுழற்சி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து வடமேற்கு இந்தியாவில் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில், தில்லியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து லேசான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 138.8 மில்லி மீட்டா் மழை பெய்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

