48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

‘சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது’

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது என்றும், அவா்களை அரசு

Updated On :28 ஆகஸ்ட் 2021, 2:13 am

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது என்றும், அவா்களை அரசு கௌரவிக்கத் தவறாது என்றும் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா கூறினாா்.

நாட்டின் 75- ஆவது சுதந்திர தின ஆண்டு அமிா்த மஹோத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தலை சிறந்த வீரா்கள் அடங்கிய குழு(கமிட்டி) ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த வீரா்களின் கருத்துகளை அறியும் வகையில், இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் முதல் கூட்டம் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரா்களை அமைச்சா் மிஸ்ரா கெளரவித்தாா்.

கூட்டத்தில் இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா பேசுகையில், ‘விடுதையைப் பெறுவதற்குக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரா்களை நாடு என்றைக்கும் மறக்காது, அரசும் கெளரவிக்கத் தவறாது. போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்ட அவா்களது பங்களிப்பு மதிப்பிட முடியாதது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் நலன் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அறிவுறுத்தல்களின்படி, இதுபோன்ற சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள யோசனைகள் மீதும் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.