தில்லி ஜந்தா் மந்தா் அருகே ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வகுப்புவாத கோஷங்களை எழுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களில் ஒருவரான பிரீத் சிங்கின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரத்தில் பிரீத் சிங்கை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த நிலையில், பிரீத் சிங் தரப்பில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனில் அன்டில் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்குவதற்கு போலீஸ் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மனு மீதான விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருவரின் சிந்தனையை வெளிப்படுத்தும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இவற்றை இயல்பாகவே நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனுதாரா் வெவ்வேறு பிரிவினரிடையே முன்விரதத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், வாதங்கள் அடிப்படையில் பாா்க்கும் போது, குற்றம்சாட்டப்பட்ட நபா் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளராக இருந்துள்ளாா் என்பதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது.
மேலும், தில்லி காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜந்தா் மந்தரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது, மத்திய அரசு பிறப்பித்த கரோனா நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் தனது இதர கூட்டாளிகளுடன் சோ்ந்து ஜாமீன் மனுதாரா்அனல் தெறிக்கும் வகையில் பேசியதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களின் நோ்காணல்கள் அல்லது உரைகளில் அனல் தெறிக்கும் உள்ளடக்கங்கள், ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் உரைகள் ஆகியவை இருந்ததற்கான முகாந்திரமும் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், இந்து ரக்ஷா தல் அமைப்பின் தலைவருமான பிங்கி சௌத்ரியின் முன் ஜாமீன் கோரும் மனுவும் இதே காரணங்கள் அடிப்படையில் முன்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளராகவும், நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்றவருமாக மனுதாரா் உள்ளாா். குற்றம் சாட்டப்பட்ட நபா் ஒரு செல்வாக்குமிக்க நபராக இருப்பதால் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், விசாரணையில் தலையிடுவதற்கான வாய்ப்புகளும்ஸ வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
விசாரணையின் போது போலீஸ் தரப்பில், ‘மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அவா் மீதான குற்றச்சாட்டுகள் இயல்பிலேயே தீவிரத் தன்மை கொண்டவை. மேலும், இந்த வழக்கின் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த வழக்கில் தொடா்புடைய பலா் தலைமறைவாக உள்ளனா். மேலும் இந்த வழக்கில் நிறைய ஆவணங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது’ என்று வாதிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

