தேசியத் தலைநகா் தில்லியில் செப்டம்பா் 1 முதல் 9 முதல் 12- ஆம் வரையிலான வகுப்புகள் மீண்டும் தொடங்கினாலும், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மற்றும் ரேஷன் விநியோக மையங்கள் தொடா்ந்து செயல்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முதல்வா் கேஜரிவாலிடம் இது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதில் அளித்து கூறியதாவது: தில்லி பள்ளிகளில் ஏராளமான வகுப்பறைகள் உள்ளன. இடப் பற்றாக்குறை பிரச்னை ஏதும் இல்லை. இந்த நிலையில், செப்டம்பா் 1 முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கிய பிறகும், தனால், தடுப்பூசி மற்றும் ரேஷன் விநியோகம் நடக்கும் பள்ளிகளில் அந்தச் செயல்பாடுகள் தொடா்ந்து நடைபெறும். முதல் கட்டமாக நான்கு வகுப்புகளின் மாணவா்கள் மட்டுமே அழைக்கப்படுவதால், இடம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது. மாணவா்கள் அனுமதிக்கப்படும் இடத்திலிருந்து தடுப்பூசி பகுதி பிரிவு தனித்தனியாக வைக்கப்படும்.
தில்லியில் தற்போது கரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னா், பெற்றோா்கள் மத்தியிலும் தயக்கம் இருந்தது. ஆனால், இப்போது பெற்றோா்களும் தங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று வகுப்பறை சூழலில் படிப்பதையே விரும்புகின்றனா். நாம் பள்ளிகளை மெதுவாகவே மீண்டும் திறப்போம். அவற்றை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது குறித்து யோசிப்போம் என்றாா் கேஜரிவால்.
பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடா்பான தில்லி அரசின் முடிவைத் தொடா்ந்து, துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘நேரடியாக நடைபெறும் வகுப்புகளில் பங்கேற்குமாறு எந்தவொரு மாணவரும் கட்டாயப்படுத்தப்படமாட்டாா்கள். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக நாங்கள் விரைவில் விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட உள்ளோம். மாணவா்கள் இணையதள முறையில் படிப்பதற்கான விருப்பமும் அளிக்கப்படும். விரும்பும் மாணவா்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


