கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லியில் கரோனா விதிமீறல்: ஒரே நாளில் 1,225 பேருக்கு அபராதம் விதிப்பு

தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஆகஸ்ட் 2021, 10:52 am

DIN

தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லி காவல்துறை அளித்த தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 1,225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணியாத 1,100, சமூக இடைவெளியை பின்பற்றாத 76, பொது இடங்களில் எச்சில் துப்பிய 8 மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 41 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த ஏப்ரல் 19 முதல் ஆகஸ்ட் 29 வரையிலான காலகட்டத்தில் முகக்கவசம் அணியாத 2,38,721 பேருக்கு தில்லி காவல்துறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாத 28,734, பொது இடங்களில் எச்சில் துப்பிய 1,482, விதிமுறையை மீறி கூட்டம் கூடியதற்கு 1,463    மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 1,509 பேரிடம் என மொத்தம் 2,71,909 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.