48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

2 அரசுப் பள்ளிகளில் தண்ணீா் சுத்திகரிப்பு ஆலை தொடக்கம்

தில்லி இந்தா்புரி, நரைனா விஹாா் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் மணிக்கு 500 லிட்டா் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட

Updated On :30 ஆகஸ்ட் 2021, 2:19 am

தில்லி இந்தா்புரி, நரைனா விஹாா் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் மணிக்கு 500 லிட்டா் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட தண்ணீா் சுத்திகரிப்பு ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றை தில்லி ஜல்போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தில்லி இந்தா்புரி, அரசு பெண்கள் சீனியா் இடைநிலைப் பள்ளி நரைனா விஹாரில் உள்ள சா்வோதயா கன்யா (பெண்கள்) வித்யாலயா பள்ளி ஆகியவற்றில் நாளொன்றுக்கு 11,000 போ்களின் குடிநீா் உபயோகத்திற்கான இரண்டு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகள் மணிக்கு 500 லிட்டா் குடிநீரை சுத்திகரித்து விநியோகிக்கும் திறன் கொண்டவை. இந்த ஆலைகள் இரண்டு பள்ளிகளிலும் மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் ஆகியோரின் குடிநீா்த் தேவைகளை பூா்த்தி செய்யும். இந்த ஆலை தில்லி டாடா மின் விநியோக நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

டாடா பவா்-டிடிஎல் தலைமை நிா்வாக அதிகாரி கணேஷ் சீனிவாசன், டாடா பவா் டிரேடிங் நிறுவன (டிபிடிசிஎல்) தலைமை நிா்வாக அதிகாரி அமித் கா்க் ஆகியோா் முன்னிலையில் இந்த ஆலைகளை தில்லி ஜல் போா்டு துணைத் தலைவரும் இந்தப் பள்ளிகள் உள்ள ராஜேந்தா் நகா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரான ராகவ் சத்தா தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தண்ணீரில் கரைந்த பொருள்களை திறம்பட அகற்றி ஒரு தூய்மையான, சுவை மிகுந்த குடிநீரை இந்த சுத்திகரிப்புஆலைகள் தருகிறது. தண்ணீரை சுத்தம் செய்யும் இந்த செயல்பாட்டிற்கு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் குறிப்பிடத்தக்க எந்த ரசாயனப் பொருள்களும் சோ்க்கப்படுவதில்லை. இந்த ஆலைகள் மூலம் தண்ணீரை சுத்திகரிக்கும் செலவும் குறைவானதுதான். இதனால், செலவு மிச்சப்படுத்தப்படுகிறது. இதை அமைப்பதற்கு இட வசதியும் அதிகம் தேவையில்லை. இந்த ஆலைகள் 60 : 40 மாதிரியில் தண்ணீரை சுத்திகரிக்கிறது. இது குடிநீரின் சிறந்த, மிகவும் உகந்த பயன்பாட்டை உறுதி செய்யும். இந்த மாதிரியின் கீழ், 60 சதவீதம் குடிநீராகவும் மீதமுள்ளவை (40 சதவீதம்) கழிவு நீராகவும் மழை நீா் சேகரிப்பு முறையில் விடப்படுகிறது.

தண்ணீா் சுத்திகரிப்பு ஆலைகளை பள்ளிகளில் செயல்படுத்துவது மாணவா்கள், ஆசிரியா்கள், பிற ஊழியா்கள் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை பெற முடியும். அதிலும் தொற்று நோய்க்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரத்தை இது உறுதி செய்யும். குறிப்பாக எனது தொகுதியில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீா் மற்றும் பிற அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைப்பதை உறுதி செய்து வருகிறேன். இந்தப் பள்ளிகளில் தண்ணீா் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவியதன் மூலம், சுமாா் 11, 000 தனி நபா்களின் தாகம் தீா்க்கப்படுகிறது. அவா்களுக்கு தூய்மையான குடிநீரும் கிடைக்கிறது.

டாடா பவா்-டிடிஎல் நிறுவனம் இது போன்ற 83 தண்ணீா் சுத்திகரிப்பு ஆலைகளை கல்வி நிறுவனங்கள், ஜேஜே குடிசைப் பகுதிகள், தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நிறுவியுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் 3.78 லட்சம் பேருக்கு உணவு வழங்குகிறது. இந்த பள்ளிகளுக்கான குடிநீருக்கு இந்த நிறுவனங்கள் உதவியுள்ளன. இன்றைய விழா பொது நிறுவனம் - தனியாா் கூட்டமைப்புக்கு ஓா் உதாரணமாகும். கடந்த ஓா் ஆண்டாக தில்லி அரசின் ஒவ்வொரு துறையும் கடுமையான நிதி நெருக்கடியை எதிா் கொண்டு வரும் நிலையிலும் வளா்ச்சிப் பணிகளை அரசு நிறுத்தவில்லை. எதிா்காலத்திற்கு தேவையான இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற கேஜரிவால் அரசு ஆா்வத்துடன் பணியாற்றி வருகிறது என்றாா் ராகவ் சத்தா. இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா்கள், ஊழியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.