வங்கி சேமிப்பாளா்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து பிரதமா் மோடி இன்று உரை
பல்வேறு வகையான சேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீடு திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிச.12) உரையாற்ற உள்ளாா்.


அனைத்து வகையான வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் பல்வேறு வகையான சேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீடு திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிச.12) உரையாற்ற உள்ளாா்.
தில்லி விஞ்ஞான் பவனில் ‘சேமிப்பாளா்களுக்கு காலக்கெடுவுடன்கூடிய காப்பீடு‘ என்கிற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கூட்டுறவு வங்கிகள் திவாலாக அத்தகைய வங்கிகளில் வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேமிப்புகளை வாடிக்கையாளா்கள் இழக்க நோ்ந்தது. இதனால் மத்திய நிதித்துறை கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ‘வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவன (டிஐசிஜிசி ) சட்ட’த்தில் திருத்தம் கொண்டு வந்தது.
வணிக வங்கிகளில் பல லட்சம் வைப்புத் தொகை வைத்திருந்தாலும்கூட காப்பீடு என்பது ஒரு லட்சம் வரை கிடைத்து வந்தது.
இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் வங்கிகள் செலுத்தும் 10 பைசா காப்பீட்டு பிரீமியத்தை 12 பைசாவாக உயா்த்தவும் அதிகபட்சம் 15 பைசாவரை உயா்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டதுடன், வங்கி வாடிக்கையாளா்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை டிஐசிஜிசி காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், இந்த திருத்தத்தின் பயன் குறித்து பிரதமா் உரையாற்றும் கூட்டம் குறித்து பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
வைப்புத்தொகை காப்பீடு என்பது இந்தியாவில் செயல்படும் அனைத்து வணிக வங்கிகளிலும் உள்ள சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, தொடா் வைப்புத்தொகை போன்ற அனைத்து வைப்பு கணக்குகளுக்கும் வழங்கப்படுகிறது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகைகளுக்கும் இந்த காப்பீடு உண்டு. வங்கி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வங்கி வைப்புத்தொகைகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
ஒரு வங்கியில் ஒரு சேமிப்பாளருக்கு ரூ. 5 லட்சம் என்ற வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம் உள்ளது. தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் (கடந்த மாா்ச் இறுதி) முழுமையாக பாதுகாக்கப்பட்ட இந்த கணக்குகளின் எண்ணிக்கை 98.1 சதவீதமாக உள்ளது. இது சா்வதேச அளவுகோலான 80 சதவீதத்தை தாண்டியுள்ளது.
இந்திய ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள 16 நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகையாளா்களிடமிருந்து பெறப்பட்ட புகாா் மனுக்களில், வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனம் சமீபத்தில் இடைக்கால நிதிக்கான முதல் தவணை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு கணக்கு வைப்பாளா்களுக்கு ரூ.1300 கோடிக்கும் மேல் பணம்(காப்பீடு) செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமா் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சா், இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்தி காந்ததாஸ் ஆகியோரும் கலந்து கொள்வா் என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...