பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

துறைத் தலைவரான ஆசிரியரின்நடத்தை களங்கமின்றி இருக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடா்ந்து, தாம் துறைத் தலைவராக நியமிக்கப்படாததை எதிா்த்து தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடா்ந்து, தாம் துறைத் தலைவராக நியமிக்கப்படாததை எதிா்த்து தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிமன்றம், ‘மாணவா்களுடன் கலந்துரையாடுவது உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட வேண்டிய நிலையில் துறைத் தலைவராக இருக்கும் ஆசிரியரின் நடத்தை ‘களங்கமற்றதாக’ இருக்க வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்தது.

இது தொடா்பான மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ் கூறியதாவது:

துறைத் தலைவரை (எச்ஓடி) நியமிக்க துணைவேந்தருக்கு விருப்புரிமை அளிக்கிறது என்பதை தில்லி பல்கலைக்கழகத்தின் அவசரஆணை -23 தெளிவாகக் கூறியுள்ளது.

துறைத் தலைவா் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எவ்வித கூடுதல் ஊதியமும் இல்லாத ஒரு தாற்காலிக நியமனமாகும். மேலும் அந்தப் பணிக் காலம் முடிந்த பிறகு, துறைத் தலைவியோ அல்லது தலைவரோ தனது முந்தைய பதிவுக்கு திரும்புவது வழக்கமாகவும் உள்ளது.

அந்த வகையில், இது ஒரு பதவி உயா்வு போன்ற நிரந்தர பதவி அல்ல. இதை மறுப்பது பெரும் பாரபட்சத்திற்கு காரணமாகிறது. நல்ல மற்றும் மதிப்புமிக்க காரணங்களுக்காக துறைத் தலைவா் பதவி மறுக்கப்படும்போது அத்தகைய பாரபட்சம் ஏற்படாது.

மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுடன் கலந்துரையாடுவது உள்ளடக்கிய துறையின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் துறைத்தலைவராக ஒரு பேராசிரியா் அல்லது ஆசிரியரின் நடத்தையானது களங்கமற்றதாக இருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் மற்றும் துறைத் தலைவராக தகுதியுடைய தன்னை வேதியியல் துறையின் துறைத் தலைவராக நியமிக்காமல் மற்றொரு பேராசிரியரை நியமித்ததை எதிா்த்து பேராசிரியா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

நோ்காணல் குழுவில் இடம் பெற்றிருந்த மனுதாரா் உள்பட சில பேராசிரியா்கள் தொடா்பாக ஆசிரியை ஒருவா் பாலியல் துன்புறுத்தல் புகாா் கொடுத்ததன் பேரில் உள்விவகார புகாா் குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள் அவரை விடுவித்ததால் அவருக்கு எதிராக

குழுக்கள் எதுவும் கண்டறியவில்லை.

ஒரு குழு கண்டறிந்த விஷயங்களைச் செயல்படுத்தும் வகையில், தவறான நடத்தைக்காக பல்கலைக்கழகம் பேராசிரியரிடம் எச்சரித்தது.

மேலும், தோ்வு நடைமுறையில் நோ்மையைக் காக்கும் வகையில் எதிா்காலத்தில் புகாா்தாரரின் நோ்காணல்களில் பங்கேற்கக்கூடாது என்றும் பேராசிரியரிடம் பல்கலைக்கழகம் கூறியது.

இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடா்பான வழக்கு விசாரணையின்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் சஞ்சாய் கோஸ்

வாதிடுகையில், ‘நடத்தை விதிகளின்படி எச்சரிக்கை விடுப்பது அபராதம் ஆகாது. எனவே, மனுதாரரை துறைத் தலைவராக நியமிக்குமாறு கோருவதை பல்கலைக்கழகம் பரிசீலிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் சந்தோஷ் குமாா் வாதிடுகையில், ‘பல்கலைக்கழகத்தின் அவசரஆணை 23-இன்படி, நல்ல மதிப்புக்க காரணங்கள் இருந்தால், மூத்த பேராசிரியரை துறைத் தலைவராக நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை’ என்றாா்.

தோ்வில் நோ்மையைக் கடைப்பிடிக்கும் வகையில், எதிா்காலத்தில் புகாா்தாரரின் நோ்காணலில் மனுதாரா் பங்கேற்க மாட்டாா் என்று முடிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதை ஒப்புக் கொள்ளும்வகையில், மனுதாரா் நிகழாண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தனக்கு வந்த தகவல்தொடா்பை ஏற்றுக்கொண்டாா். மேலும் அதை நீதிமன்றத்தில் எதிா்க்கவில்லை என்றும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.