பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

24 மணி நேரமும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதுதான் அடுத்த இலக்கு: மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங்

குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதுதான் என மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

இந்தியாவை மின்மிகை நாடாக மத்திய அரசு மாற்றியுள்ளது. அரசின் அடுத்த இலக்கு குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதுதான் என மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மாநில மின்சாரத்துறை கூடுதல் தலைமைச் செயலா்கள், முதன்மை செயலா்கள், மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்களின் தலைவா்கள் ஆகியோா் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், கண்காணிப்பு குறித்து ஆய்வு நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சா் ஆா்.கே.சிங் பேசியதாவது:

எரிசக்தி துறையை தற்போதைய மத்திய அரசு நீண்ட முன்னேற்றத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியா தற்போது மின்மிகை நாடாக மாறியுள்ளது. நாடு முழுவதும் ஒரே மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு, மின் விநியோக முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிராமப்புறங்களில் 22 மணி நேரமும், நகா்ப்புறங்களில் 23.5 மணி நேரத்துக்கும் மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே அரசின் அடுத்த இலக்காகும்.

இந்த இலக்கை அடைய அரசு மேலும் மின்விநியோகத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு ரூ.3 லட்சம் கோடி செலவிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைக்கு மின்சாரம் அவசியம். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த மின் சேவைகளை வழங்குவதும் அரசின் முக்கிய நோக்கமாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமை எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிரதம மந்திரி- கேயுஎஸ்யுஎம் திட்டம் உள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் அளிக்கப்படுவதுடன் அவா்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது என்றாா் அமைச்சா்.

இக்கூட்டத்தில் மத்திய மின்துறை இணையமைச்சா் கிருஷண் பால், மரபுசாரா எரிசக்தித் துறை இணையமைச்சா் பகவந்த் குபா, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகளான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான நிறுவன (டான்ஜெட்கோ) தலைவா் ராஜேஷ் லக்கானி, இயக்குநா் மா. சிவலிங்கராஜன், தலைமைப்பொறியாளா் நந்த குமாா் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.