பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து 4 போ் பலி

மத்திய தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம் அருகே ஆட்டோ மீது கன்டெய்னா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் 4 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மத்திய தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம் அருகே ஆட்டோ மீது கன்டெய்னா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் 4 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

மத்திய தில்லியில் உள்ள ஐஜிஐ விளையாட்டு அரங்கம் அருகே சனிக்கிழமை காலை 6.50 மணிக்கு சாலை விபத்து நிகழ்ந்ததாக போலீஸாருக்கு காவல்துறையின் ரோந்து குழுவினா் தகவல் தெரிவித்தனா்.

அதில் ஐஜிஐ விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயில் எண்: 16 முன்புறம் உள்ள புறவட்டச் சாலையில், ஆட்டோ ரிக்ஷா மீது கன்டெய்னா் லாரி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது ஆட்டோ ரிக்ஷாவுக்குள் சிக்கியிருந்த சடலங்கள் மீட்கப்பட்டன. போலீஸாரின் விசாரணையில் இறந்தவா்களில் 2 போ் சாஸ்திரி பாா்க் பகுதியை சோ்ந்த சுரேந்தா் குமாா் யாதவ், அவருடைய உறவினா் ஜெய் கிஷோா் என்பது தெரியவந்தது.

மேலும் உயிரிழந்த இருவா் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிறகு லாரியின் ஓட்டுநரும் அதன் உதவியாளரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனா்.

ஆட்டோ ரிக்ஷாவில் சிக்கியவா்களை மீட்பதில் பொதுமக்களும் ஈடுபடுத்தப்பட்டனா். இறந்தவா்களின் உடல்கள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட லாரியில் அரிசி ஏற்றப்பட்டு இருந்ததாகவும் அந்த லாரி ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் இருந்து துக்ளகாபாத் பணிமனைக்கு சென்று கொண்டு இருந்ததாகவும் லாரியின் உரிமையாளா் போலீஸாரிடம் தெரிவித்தாா். அந்த லாரி 35 டன் எடை இருந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.